களங்கமற்ற முகம் அனைவரையும் ஈர்க்கும். முகத்தில் பருக்கள் தோன்றி அதனால் ஏற்படும் தழும்புகள் விரைவில் போகாது. அவற்றை போக்க சில இயற்கை தீர்வுகள் உண்டு. அவற்றை பயன்படுத்தி தழும்புகளை மறைய செய்யலாம். அப்படி பட்ட தீர்வுகளில் ஒன்று வைட்டமின் ஈ எண்ணெய்.

இந்த வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் சரும அழகை மேம்படுத்த பெரிதும் பயன்படுகிறது. சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து நமது சருமத்தை பாதுகாக்கின்றது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஏற்படும் தழும்புகள் , நீங்காத வடுவாக மாற வாய்ப்பில்லாமல் , ஒரு நாளில் மூன்று முறை வைட்டமின் ஈ எண்ணெய்யை பயன்படுத்தும்போது மறைகிறது. மற்றும் காயத்தை சுற்றி தழும்பு திசுக்கள் ஏற்படாமல் தடுக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

உணவின் வழியே இந்த சத்தை எடுத்துக் கொள்வது நல்லது. இலைகளை உடைய பச்சை காய்கறிகள் , நட்ஸ், தானியங்கள் போன்றவற்றில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது.

ஆண் பெண் இருவருக்கும் நீளமான கருமையான கூந்தல் என்றால் பிடிக்காமல் இருக்காது ஆனால் இவர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் குறைபாடுகளினால் முடி உதிர்வு ஏற்படுகிறது. இதை சரி செய்வதற்காக நாம் வைட்டமின்-ஈ மாத்திரைகளை உட்கொண்டால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

தலை முடி வெடிப்புகள் மறை

தலை முடி வெடிப்பு பிரச்சனை உள்ளவர்கள் இந்த எண்ணெயை முடி வெடிப்புகளில் தேய்த்து வந்தால் தலை முடி வெடிப்புகள் மறையும்.

முடி வெகு சிகரமாக வளர

இரவு தூங்குவதற்கு முன், புருவத்தில் ஒரு விட்டமின் ஈ மாத்திரையை (vitamin e capsule uses for face in tamil) அப்ளை செய்து மறுநாள் காலை கழுவுங்கள் இவ்வாறு தினமும் செய்வதினால் புருவத்தில் உள்ள முடி வெகு சிகரமாக வளர ஆரம்பிக்கும்.

கருவளையம்

அதிகம் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு, தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு, கம்ப்யூட்டரில் வேலை செய்ப்பவர்களுக்கு மற்றும் இரவில் சரியாக தூங்காமல் இருப்பவர்களுக்கு கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கும். அது சருமத்தின் அழகையே கெடுத்துவிடும். இரவு தூங்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், ஒரு விட்டமின் ஈ மாத்திரையை பிழிந்து நன்றாக கலந்து கொண்டு, இந்த கலவையை கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்தால் கருவளையம் மிக விரைவில் மறைந்து சருமம் அழகாக காணப்படும்.

சருமம் பளபளக்க

காபி தூள், ஒரு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொண்டு, இந்த கலவையை முகத்தை அப்ளை செய்து நன்கு ஸ்க்ரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பளபளப்பாக காணப்படும்.

சுருக்கங்கள் மறைய :

விட்டமின் ஈ எண்ணெயை முகத்தில் தேய்த்து இரவு முழுவதும் அப்படியே விடுங்கள். மறுநாள் காலை முகத்தை கழுவலாம். இப்படி செய்வதனால் முகத்தில் இருக்கும் சின்ன சுருக்கங்களும் மறைந்து இளமையான தோற்றத்தை பெற முடியும்.

வெடிப்புகளை நீக்க :

வைட்டமின் ஈ எண்ணெய் பிசுப்பிசுப்பு தன்மை அற்றது என்பதால் நீங்கள் குளித்து முடித்த பிறகு ஒரு மாய்ஸ்ட்ரைஸரை போல இதை உங்கள் உடல் முழுவதும் தடவினால் சில வினாடிகளிலேயே இந்த எண்ணெய்யைச் சருமம் உள் இழுத்துக் கொண்டு மிகவும் மென்மையாக மாறுவதை நீங்களே உணர முடியும். பனிக்காலங்களில் உடம்பில் தடவினால் சருமத்தில் வெடிப்புகள் ஏற்படாது.