கொரோனா வைரஸ் முதலில் இந்த உறுப்பைதான் தாக்குமா?.. ஆய்வில் வெளியான பகீர் தகவல்

கொரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்திகொண்டு தான் வருகிறது.

இதற்கான உரிய தடுப்பூசியை கண்டுப்பிடிக்க அனைத்து நாடுகளும் பரிசோதனையிலேயே உள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் ஆனது இதுவரை பல வகைகளில் பரவலாம் என செய்திகள் வெளியான நிலையில், தற்போது கொரோனா வைரஸ் மூக்கு வழியாக நுரையீரலுக்குள் நுழைந்து இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வில் வெளியாகியுள்ளது.

இது சம்பந்தமாக ஜெர்மனியில் உள்ள யுனிவர்சிடா டிஸ்ம் மெடிசின் அறக்கட்டளை ஆய்வு ஒன்றை நடத்தியது.

அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 33 பேருடைய மூளை மாதிரிகளை சேகரித்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

அதில் 22 பேர் ஆண்கள், 11 பேர் பெண்கள். அந்த ஆய்வில், கொரோனா வைரஸ் மூக்கு வழியாக சென்று மூளைக்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், மூளையில் உள்ள திரவங்களில் கொரோனா வைரசின் மரபணுக்கூறுகள் ஒட்டிக் கொண்டிருந்தது தென்பட்டது. அதுமட்டுமின்றி பெருமூளை தண்டு வட நீரிலும் வைரஸ் மரபணுக்கள் காணப்பட்டன.

எனவே, கொரோனா வைரஸ் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது என்பது இந்த ஆய்வு மூலம் தெரிய வந்தது.

மனிதனை கொரோனா வைரஸ் தாக்கினால், அது மூளை பகுதிக்குள் செல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

எனவே மூளையில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் நரம்பு மண்டலம் முழுவதையும் அது பாதிக்க செய்துவிடும் என்று ஆய்வு நிபுணர்கள் கூறுகிறார்கள்.