வலிமை திரைப்படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு இதுவரை நடைபெற்றுள்ளது. இந்த படத்தை பொறுத்தவரை படத்தில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. அந்த வகையில் இதுவரை எடுக்கப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் எல்லாமே சிறப்பாக வந்துள்ளதாம்.

படத்தில் சண்டை காட்சி நடிக்கும் போது விபத்து ஏற்பட சிகிச்சை பெற்று நடித்து முடிக்க வேண்டியதை முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. திருப்பூரில் உள்ள Kongu Rifle Club என்ற துப்பாக்கி சுடும் இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் எடுத்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் இடையே அதிகமாக வைரலாகி வருகிறது. வலிமை படப்பிடிப்பிற்கு நடுவில் துப்பாக்கி சுடும் பயிற்சியையும் அஜித் செய்து வருகிறாராம்.

மேலும் இந்த படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகள் எல்லாமே ரியலாக இருக்குமாம். இதுவரைக்கும் எடுக்கப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் அனைத்திலுமே டூப் எதுவும் இல்லாமல் தல அஜித்தே மிரட்டலாக செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் போலீஸ் அடிமுறை என்னும் புதுமையான முறையை பயன்படுத்தி ஒரு சண்டை காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம். இதற்காகவே தல அஜித் தனியாக பயிற்சி எடுத்து அந்த காட்சிகளை சிறப்பாக முடித்துள்ளார். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பக்காவான ட்ரீட்டாக இந்த சண்டை காட்சி இருக்குமாம்.