ரஜினி கூறிய அந்த ஒரு வார்த்தை வார்த்தையைக் கேட்டு கண்கலங்கிய நிர்வாகிகள்! கூட்டத்தில் நடந்த உருக்கமான சம்பவம் இதோ !

நடிகரான ரஜினி நிர்வாகிகள் கூட்டத்தின் போது, என் உயிரைப் பற்றி எல்லாம் எனக்கு எந்த கவலையும் இல்லை என்று பேசியதைக் கேட்டு அங்கிருந்த நிர்வாகிகள் சிலர் கண்கலங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் எப்போது கட்சி ஆரம்பிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. ஒவ்வொரு முறையும், அவர் நிர்வாகிகளுடனான சந்திப்பின் போது, இந்த முறை கட்சியை அறிவித்துவிடுவார் என்று தான் நம்பப்படும்.

ஆனால், ரஜினியோ அந்த எதிர்பார்ப்பை எல்லாம் தவிடு பொடியாக்கிவிடுவார்.

அந்த வகையில் இன்று காலை ரஜினி, சென்னையில் மக்கள் மன்றத்தின் 37 மாவட்ட செயலாளர்களுடன் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில்தான் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தமது உடல்நலம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

அதில், ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு இருக்கிறது. கொரோனா காலம் வேற, இந்த சூழ்நிலையில் மீண்டும் உடல்நிலை பாதித்தால், கொரோனாவுக்கு சிகிச்சை எடுக்கும் போது ஏற்கனவே பாதிக்கப்பட்டதால சிறுநீரகத்துக்கும் பிரச்சனை வரும் என்று மருத்துவர்கள் சொல்லியுள்ளனர்.

எனக்கு என் உயிரைப்பற்றி எல்லாம் கவலை இல்லை, இருந்தாலும் போனமா ஜெயிச்சோமா என்று இருக்கினும், அதை விட்டு சொதப்பிவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.