புயலால் நீர் தேங்கிய பகுதிகள் ; களம் இறங்கிய முதல்வர்: விரைவில் நடவடிக்கை என அறிவிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களின் தேவையை புரிந்து சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார். மக்களுக்கு நன்மை தரும் வகையில் பல நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை அமுல்படுத்தி வருகிறார்.அவரது நடவடிக்கையால் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒருநாளைக்கு 1500 ஆக குறைந்துவிட்டது. மேலும், அவர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிவா புயலால பாதிப்பு எதுவும் ஏற்படாமல் தமிழகம் தப்பித்துள்ளது.

இந்நிலையில், புயல் காரணமாக ஏற்பட்ட மழை காரணமாக சென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீரால் தேங்கியது. அந்த பகுதிகளை அவர் இன்று நேரில் ஆய்வு செய்தார். மேலும், துரைப்பாக்கம் மடு பகுதியில் வளர்ந்திர்த ஆகாய தாமரைகளை அகற்றும் பணியையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒவ்வொரு முறை சென்னையில் மழைபெய்யும் போது சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும். முட்டுக்காடு முகத்துவாரத்தை 30 மீட்டரில் இருந்து 100 மீட்டர் வரை அகலப்படுத்தும் வேலைகள் தொடங்கியுள்ளது. மேலும், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீர் பக்கிங்காம் கால்வாய்க்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், மேற்கு தாம்பரம், வரதராஜபுரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளிலும் மழை நீர் தேங்காமல் இருக்க அரசு தீர்வு காணும் என தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிவிப்பு சென்னை வாசிகளிடையே குறிப்பாக மழைநீர் தேங்கும் பதிகளில் வசிக்கும் மக்களிடையே மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.