பெரும்பாலும் வீட்டில் சிறிய ரக தீக்காயங்களே ஏற்படுகின்றன. இவை தோலின் வெளிப்புற அடுக்கை மட்டுமே பாதிக்கும்.

வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன தீக்காயங்களுக்கு மருத்துவமனைக்குப் போகாமல் நாம் வீட்டிலேயே ஏதாவது வைத்தியம் செய்து விடுகிறோம்.

அதுவே பல சமயங்களில் நமக்குப் பிரச்சினையை அதிகரிப்பதாக அமைந்து விடுகிறது.

அப்படி நாம் வீட்டிலேயே செய்யும் எந்தெந்த வீட்டு வைத்தியங்களை நாம் செய்யாமல் இருப்பது நல்லது என்று பார்க்கலாம்.

வெண்ணெய்
இயற்கையாகவே வெண்ணெய் வெப்பத்தை தக்கவைத்து கொள்ளும் பண்புகளை கொண்டுள்ளது. இதனால் வெண்ணெயை தீக்காயத்தில் பயன்படுத்துவதன் மூலம் அது உங்கள் தீக்காயத்தை மேலும் மோசமாக்கும்.

மேலும் வெண்ணெய் எரிந்த
சருமத்தை பாதிப்பிற்கு உள்ளாக்கும். மட்டுமின்றி வெண்ணெய் எரிந்த சருமத்தை பாதிக்கக்கூடிய பாக்டீரியாக்களை கொண்டிருக்கலாம்.

​எண்ணெய்கள்
வெண்ணெய் போலவே எண்ணெய்களும் வெப்பத்தை தக்கவைத்து கொண்டுள்ளன. தேங்காய் எண்ணெய், ஆலீவ் எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய்களும் இதில் அடங்கும். தீக்காயங்களில் நீங்கள் எண்ணெய்களை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அது நிச்சயம் உங்கள் காயங்களை குணப்படுத்துவதற்கு பதில் மேலும் மோசமாக்கும்.

​முட்டை வெள்ளை கரு
தீக்காயங்களுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பிரபலமான அதே சமயம் வெகுக்காலமாக பின்பற்றப்பட்டு வரும் முறைகளில் இதுவும் ஒன்று. ஆனால் சமைக்கப்படாத முட்டையின் வெள்ளைக்கருவில் அதிகப்பட்சமான பாக்டீரியாக்கள் இருக்கும்.

இவற்றை பயன்படுத்துவதால் தீக்காயம் பட்ட இடத்தில் பாக்டீரியா தொற்று அதிகமாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் முட்டைகள் ஒவ்வாமை எதிர் வினைக்கு வழி வகுக்கும்.

​பற்பசை
முதல் நிலை தீக்காயங்களுக்கு பலர் பரவலாக முதலுதவி மருந்தாக பற்பசையை பயன்படுத்துகின்றனர். அது சரி என அவர்கள் நினைக்கின்றனர்.

ஆனால் அது தீக்காயங்களை மேலும் மோசமாக்கவே செய்கின்றது. பற்பசையில் உள்ள பொருட்கள்தீக்காயங்களை மேலும் எரிச்சலடைய செய்து அதிக சேதத்தை ஏற்படுத்தும். இது மோசமான பாக்டீரியாக்களின் உற்பத்திக்கும் வழி வகுக்கலாம்.

​ஐஸ்கட்டி
தீக்காயத்தின் மேல் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரை வைப்பது என்பது பரவலாக அனைவரும் செய்து வரும் முதலுதவி முறைகளில் ஒன்றாகும். ஆனால் அவ்வாறு செய்வது தீக்காயங்களை மேலும் மோசமாக்கும்.

முறையற்ற முறையில் இவற்றை பயன்படுத்தினால் அதனால் தீக்காயம் மோசமாக கூடும்.

எனவே முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தீக்காயங்களின் போது இது போன்ற முதலுதவி முறைகளை தவிர்ப்பது நல்லது.