கேப்டன் டாஸ்க்கில் பாலாஜி,ரமேஷ், ரம்யா மூவரும் விளையாடினர். இதை மற்ற போட்டியாளர்கள் கண்காணித்து கொண்டிருந்தனர். கடைசியில் ரமேஷ் வெற்றி பெற்று கேப்டன் ஆக தேர்வு செய்யப்பட்டார்.

இதனால் அவரை இந்த வாரம் யாரும் நாமினேட் செய்ய முடியாது. ரம்யா இந்த முடிவை இயல்பாக ஏற்றுக்கொள்ள, பாலாஜியால் முடியவில்லை.

தான் அந்த நாலு பந்துகளையும் தட்டி விடவில்லை. என விளக்கம் சொன்ன அனைவரிடமும் அடம்பிடித்தார். ஒருகட்டத்தில் ஆரி ஒதுங்கிவிட, ரியோவின் விளக்கத்தை பாலாஜி ஏற்கவே இல்லை. கடைசியில் ரியோ எப்படி பார்த்தாலும் ரமேஷ் தான் லீடிங்கில் இருக்கிறார்.

அதனால் நீங்கள் வெற்றி பெற முடியாது என பாலாஜியிடம் விளக்கம் அளித்தார். இதையடுத்தே அவர் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தார்.

இந்த வாக்குவாதம் சென்று கொண்டிருக்கும் போது பிக்பாஸ் திடீரென குறும்படம் போட்டு காட்டினார். இதனால் ரசிகர்களுக்கு பாலாஜி தான் தட்டி விட்டார் என்பது தெரியவந்தது.

ஆனால் உள்ளே குறும்படம் போடப்படவில்லை. பிக்பாஸ் போட்டுக்காட்டிய அந்த குறும்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வாடிக்கையாளராக இருந்த ஹவுஸ்மேட்ஸ், தங்களுக்கு இடையிலான பிரச்சனை குறித்து பேசினர். ஹவுஸ்மேட்ஸ் இடையிலான பிரச்சனையை தீர்க்கும் வகையில் இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்த டாஸ்க்கால் பிரச்சனைகள் புதிது புதிதாய் முளைத்ததே தவிர பிரச்சனைகள் தீர்ந்த பாடில்லை. இந்த டாஸ்க்கால் கடந்த வாரம் பிக்பாஸ் வீடே ரணகளமாக இருந்தது. இந்த டாஸ்க்கை மையப்படுத்தியே பல்வேறு பிரச்சனைகள் வெடித்தன.

கடந்த வாரம் ஆரிக்கும் பாலாஜிக்கும் நடந்த பிரச்சனைதான் பெரிதாக பார்க்கப்பட்டது. ஆரியை நேர்மையில்லாதவர் என காட்ட பாலாஜி மொத்த ஹவுஸ்மேட்ஸையும் அவருக்கு எதிராய் திருப்பினார்.

போதாகுறைக்கு வேற எதையாவது நீட்டி பேசுவேன் என்ற பாலாஜி, ஆரியை நோக்கி தனது காலை நீட்டி பேசினார். கடந்த வார இறுதியில் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்த கமல், காலை நீட்டி பேசியது குறித்தும் ஆரியை தரக்குறைவாக பேசியது குறித்தும் கொஞ்சம் கூட தட்டிக் கேட்கவில்லை.

சனத்தை அட்ஜெஸ்ட்மென்ட் செய்து அழகிப் பட்டத்தை வென்றார் என்று கூறியதற்கும், அதனை தொடர்ந்து தறுதலை என்றும் அவளே இவளே என்றும் கூறியது குறித்துமே கமல் பெரிதாக பாலாஜியை விசாரிக்கவில்லை. சாதாரணமாக தடவிதான் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.