பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுச்சி, பாலாஜி குறித்து பதிவிட்டுள்ள இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரபல பாடகியும் ஆர்ஜேவுமான சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் இரண்டாவது வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றார் சுச்சி. சென்ற வேகத்தில் ஒரு சிலருக்கு சரியான ரிவ்வியூவும் சிலருக்கு சொதப்பல் ரிவ்வியூவும் கொடுத்தார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற உடன் எல்லோருடனும் பழகிய சுச்சி, அடுத்தடுத்த நாட்களில் பாலாஜியிடம் லாக்கானார். அவரை தவிர வேறு யாரிடமும் அந்த அளவுக்கு பேசமால் இருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற மூன்றாவது வாரத்திலேயே முதல் முறையாக நாமினேஷனுக்கு வந்து வெளியேறினார் சுச்சி.

அவர் பாலாவிடம் மட்டும் நெருக்கமாக பழகியதுதான் அவரது எலிமினேஷனுக்கு காரணம் என்றும் சுச்சியிடம் இருந்து ரொம்ப எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம்தான் மிஞ்சியதாகவும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டனர். அதே நேரத்தில் சுச்சி, பிக்பாஸ் வீட்டுக்குள் திடீர் திடீரென அழுதார் என்றும் கத்தினார் என்றும் தகவல் பரவியது.

பிக்பாஸ் வீட்டுக்குள் பாலாஜிக்கு ஆதரவாக இருந்த சுச்சி வெளியே வந்த பிறகும் அவருக்கு ஆதரவாய் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

அண்மையில் பாலாஜிக்கும் ஷிவானிக்கும் இடையில் இருப்பது வெறும் நட்புதான் என்பதை குறிக்கும் மீம்ஸ் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் சுச்சி.

இந்நிலையில் தற்போது மீண்டும் பாலாஜிக்கு ஆதரவாய் அவருக்கு ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். அவரது பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதாவது பிக்பாஸ் வீட்டில் முதல் வாரத்தில் நடைபெற்ற கடந்து வந்த பாதை டாஸ்க்கில் பாலாஜி கண்ணீர் விட்டு பேசிய போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

ஆனால் பாலாஜியின் புகைப்படங்கள் சில வெளியாகி அவர் இரட்டை வேடம் போடுகின்றார். இன்றும் இவரை சுச்சி நம்புகிறாரே என்று கூறி வருகின்றனர்.