வலிமை படத்தின் மூன்றுகட்ட படப்பிடிப்பு இதுவரை நடைபெற்றுள்ளது. நான்காவது கட்ட படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது. கடைசியாக நடந்த மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் பல அதிரடியான சேசிங் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு காட்சி எடுக்கப்பட்ட போது தல அஜித் தவறி கீழே விழுந்துள்ளார். அதோடு பைக்கின் வேகத்தால் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளார். மேலும் அவரது கையில் பைக்கின் சைலன்சர் பட்டு காயமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அஜித்திற்கு முதலுதவி கொடுக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப் பட்டுள்ளார்.


இதற்கு பின்னர் படத்தின் இயக்குனர் H வினோத் தல அஜித்திடம் ஓய்வு எடுக்க கூறியுள்ளார். ஆனால் தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்பட கூடாதென மறுநாளே மீண்டும் அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு அதே ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக முடித்து கொடுத்துள்ளார். இதை பார்த்த படக்குழுவினர் ‘இதனாலதான் அவர் தல’ என அஜித்தை பாராட்டியுள்ளனர்.