சமீபகாலமாக விஜய்க்கு அரசியல்வாதிகள்தான் எதிரியாக இருந்த நிலையில் தற்போது தன்னுடைய வீட்டிலேயே அவருக்கு ஒரு புதிய எதிரி உருவாகியுள்ளது அனைவருக்கும் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளதாம்.

விஜய் தன்னுடைய படங்களில் சமீப காலமாக அரசியல் கருத்துக்கள் பேசி வருவதால் அவரின் மீது எப்போதுமே அரசியல்வாதிகளுக்கு ஒரு கண் இருந்தது.

விஜய்யின் ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் ஏதாவது ஒரு பிரச்சனை செய்து அந்த படத்தின் வெளியீட்டில் கோளாறு செய்து பெரும் சிரமத்தை ஏற்படுத்துவார்கள்.

ஆனால் தற்போது விஜய் அரசியலில் கொஞ்ச நாள் கழிச்சு களமிறங்கலாம் என முடிவு செய்திருந்த நிலையில் அது பொறுக்க முடியாத விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் விஜய்யுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நபர்களை வைத்துக்கொண்டு கட்சியை உருவாக்கப் போவதாக விஜய்யிடம் தெரிவித்தார் எஸ் ஏ சந்திரசேகர்.

ஆனால் அதற்கு தளபதி விஜய் சம்மதம் தெரிவிக்காத நிலையில் விஜய்யை பற்றி தேவையில்லாத வதந்திகளை கிழப்பிக் கொண்டிருக்கிறார்.

கட்சியில் அவர் மட்டுமே இருப்பதால் தற்போதைக்கு சாத்தியமில்லை என அந்த செயலில் இருந்து பின்வாங்கி விட்டாராம். வீட்டிற்குள் நடக்கும் சண்டை தெருவுக்கு வந்த கதையாக மாறி விட்டது தளபதியின் நிலைமை.