வலிமை ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்: எப்போது வெளியாகிறது தெரியுமா? குஷியில் அஜித் ரசிகர்கள்

தல அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் வலிமை படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு இதுவரை நடைபெற்றுள்ளது. நான்காம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது. இதுவரை 70% படப்பிடிப்பு மொத்தமாக நடைபெற்றுள்ளது.

வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் எல்லாமே படமாக்கி முடிக்க வேண்டுமென படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் தற்போது கசிந்துள்ளது.

அதன்படி வருகிற ஏப்ரல் 14ம் தேதி வலிமை படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்காக இப்போதே படக்குழுவினர் பல திட்டங்கள் போட்டு அனைத்து வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. என்ன தல ரசிகர்களே ரெடியா ?