தெலுங்கில் ரவிதேஜா நடித்த நிலா டிக்கெட் என்கிற படத்தில், அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் மும்பையை சேர்ந்த மாளவிகா ஷர்மா என்பவர்.

அதைத்தொடர்ந்து, தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிக்கும் ரெட் என்கிற படத்தில் நடிக்கிறார். அருண் விஜய் இரண்டு வேடங்களில் கலக்கி இருந்த சூப்பர் ஹிட் த்ரில்லர் திரைப்படமான தடம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்த இவருக்கு தமிழிலும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த படம் குறித்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டபோது, யாருக்கும் சொல்லாத ஒரு ரகசியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் மாளவிகா ஷர்மா.

அதாவது என்னுடைய சிறு வயது முதலே தனக்கு, பார்க்கும் பொருட்களை எல்லாம், யாருக்கும் தெரியாமல் எடுத்து, ஒளித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கின்றது என்றும் இதனை வெளியில் சொல்வதில் எனக்கு வெட்கம் ஒன்றும் இல்லை என கூறியுள்ளார்.

இது கிளப்டோ மேனியா என்கிற நோய் என்று கூறும் மாளவிகா விவரம் தெரிந்த நாள் முதல் நீண்ட நாட்களாகவே இருக்கிறது என்று கூறியுள்ளார் மாளவிகா அதேசமயம், தான் இதுவரை சின்னச்சின்ன பொருட்களாக மட்டுமே எடுத்ததாகவும், திருடியதற்காக இதுவரை யாரிடமும் பிடிபடவில்லை என்றும் கூறியுள்ளார் மாளவிகா.

நடிப்புக்கு மட்டுமல்லாமல் கவர்ச்சிக்கும் தாராளம் காட்ட தயாராக இருக்கும் நடிகை மாளவிகா ஷர்மா இப்பொழுது தெலுங்கில் ஹாட் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.