அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகர்கள் செல்கிறார்களா?- அவர்களே போட்ட டுவிட் இதோ !

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பை குறைத்துக் கொண்டு வருகிறது என்று தான் கூற வேண்டும். எப்போதும் வீடு சண்டையாகவே உள்ளது.

போட்டியாளர்களுக்குள் வெறுப்புகள் ஏற்பட்டு வருகிறது. நிகழ்ச்சி குறித்தும் பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

அண்மையில் நடிகர் பரத் தனது டுவிட்டரில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் டம்மி போட்டியாளர்கள் வெளியேறினால் நன்றாக இருக்கும் என்பது போல் டுவிட் செய்ய, பிரேம்ஜி நாம் உள்ளே செல்வோமா என கேட்கிறார்.

அதற்கு பரத், நிஜமாக கூறுகிறீர்களா என்று கேட்க பிரேம்ஜி உங்களுக்கு ஓகே என்றால் செல்லலாம் என பதில் டுவிட் போட்டுள்ளார்.