இயக்குநர் தங்கபர்ச்சானின் பள்ளிக் கூடம், இயக்குநர் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக,கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுஜி பாலா.

உண்மை என்ற படத்தில் நடித்து வரும்போது, அந்த படத்தின் டைரக்டர் பி.ரவிக்குமாருக்கும், நடிகை சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, நிச்சயதார்த்தம் முறிந்து போனதாக அறிவித்துவிட்டனர்.

இதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். பிறகு, நான் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தது, அவருக்கு பிடிக்கவில்லை. என்னை மிரட்டுகிறார். எனது பெற்றோரை கொலை செய்துவிடுவதாக சொல்கிறார்.

எனது முகத்தில் அமிலத்தை வீசி கொன்றுவிடுவேன் என்கிறார். அவரால் எனது பெற்றோர் உயிருக்கும், எனது உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனவே அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், எங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் பி.ரவிக்குமார் மீது புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் சுஜிபாலா.

இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, சுஜிபாலா பிரபல நடன இயக்குனர் ஒருவருடன் தகாத தொடர்பில் இருந்ததற்கான புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டார்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், இவரது சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.