பாரதிராஜா இயக்கிய கடல் பூக்கள் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானவர் சிந்து மேனன். அதைத்தொடர்ந்து சரத்குமார் நடித்த சமுத்திரம் என்ற படத்திலும், இயக்குநர் ஷங்கரின் சொந்த தயாரிப்பான ஈரம் படத்தின் கதாநாயகியாகவும் நடித்தார்.

கேரளாவைச் சேர்ந்த அவர் பெங்களூருவில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இடையில், காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்தார். மேலும், கடன் மோசடி வழக்கில் கைதானார்.

இவர் இவருடைய சகோதர் ஒருவருக்கு ரூ.36 லட்சம் வங்கி லோன் வாங்க தனது சொத்துக்களை கியாரண்டி கொடுத்துள்ளார். அந்த ஆவணங்கள் போலி என தெரிய வரவே இவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் லண்டனை சேர்ந்த பிரபு என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்த சிந்துமேனன், தற்போது லண்டனிலேயே செட்டிலாகிவிட்டார். பொதுவாக குடும்பப்பாங்கான வேடங்களிலேயே நடித்து வந்த இவர் கவர்ச்சியான வேடங்களிலும் நடிக்க பச்சை கொடி காட்டினார்.

அதற்காக, தன்னுடைய அழகு தெரியும் படி சில கவர்ச்சி போட்டோ ஷூட்டுகளையும் நடத்தினார். ஆனால், அவருடைய நேரம் அவரை திருமண பந்தத்திற்குள் இணைத்து நாடு கடத்தி விட்டது.

இதுவரை பலரும் பார்த்திராத இவரது சில கவர்ச்சி புகைப்படங்கள் இதோ.