பாக்ஸ் ஆபீஸில் அசால்டாக அடிச்சி தூக்கிய மூக்குத்தி அம்மன், நடந்தது என்ன ? முழு விபரம் இதோ

நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த தீபாவளியை முன்னிட்டு டிஸ்னி ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியானது மூக்குத்தி அம்மன் திரைப்படம். கடவுள் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றும் போலி சாமியார்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாக இப்படத்தின் கதைக்களம் இருந்தது.

மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்று, படக்குழுவினருக்கும் ப்ளாக்பஸ்டர் வெற்றி திரைப்படமாக மாறியுள்ளது இப்படம். மேலும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம் என்னும் பெயரையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியான பின்பு டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தின் வாடிக்கையாளர்கள் (subscribers) எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதுவரை எந்த தமிழ் படத்திற்கும் இல்லாத அளவுக்கு பல புதிய வாடிக்கையாளர்கள் டிஸ்னி ஹாட்ஸ்டாரை சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர்.