செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவரின் தற்போதைய நிலையை கண்டு சமூகவாசிகள் கடும் வியப்பில் உள்ளனர்.

6 வருடங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற முடியாமல் இருந்த இளைஞரை அவரின் தாய் செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.

குறித்த இளைஞரின் தாயார் மகனின் உயிரை எப்படியாவது காப்பாற்றிக்கொடுங்கள் என்று கண்ணீர் மல்க கேட்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த நபரின் தற்போதைய புகைப்படத்தை பதிவிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், 6 ஆண்டுகளுக்கு பின்னர் இவரை பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு சில உதவிகளும் செய்யப்பட்டிருந்தது. இப்படியான சூழலில் தற்போதைய நிலையை கண்டு ராமகிருஷ்ணனும் இன்ப அதிர்ச்சியில் உள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.