பிக்பாஸ் வீட்டில் புகுந்த தண்ணீர்! இந்த வார வெளியேற்றம் இல்லையா?.. காணொளியுடன் வெளியான உண்மை

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது சுவாரசியமாக சென்றுகொண்டிருக்கிறது. தற்போது ஏற்பட்ட நிவர் புயல் காரணமாக பிக்பாஸ் வீட்டில் வெள்ளம் புகுந்ததாகவும், அதனால் போட்டியாளர்கள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இந்த வார எலிமினேஷன் நடைபெறுமா? பிக்பாஸ் தொடர்ந்து நடக்குமா? என கேள்விகள் எழுந்துள்ளது.

அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடைப்பெற்றால், ஏற்கனவே இந்த வார எலமினேஷனில் இருப்பது ஆரி, பாலா, சம்யுக்தா, சோம், ரமேஷ், நிஷா, சனம் இவர்கள் ஏழு பேரும் இடம்பெற்றனர்.

இதில், யார் வெளியேறுவார்கள் என எதிர்பார்த்தால், ஆரி, பாலாஜி, சோம் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்கள்.

ஆனால், ரமேஷ், சனம், சம்யுக்தா, நிஷா இவர்கள் நால்வரும் ஒரு சில வாக்குகள் அடிப்படையிலேயே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மேலும், அதிலும் குறைவான வாக்குகளில் சனம் மற்றும் சம்யுக்தா இடம்பெற்றதால் இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புகள் அதிக இருப்பதாக தெரிகிறது.

எப்படியும், இந்த வார ஷோவில் வெள்ளம் புகுந்ததால் ஒரு வேளை எலிமினேஷனும் தடை செய்ய கூட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் உலா வரத்தொடங்கியுள்ளது.