50 வயதை கடந்தும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் போட்டோஷுட் நடத்திய நடிகை பானுபிரியா

கடந்த 1990களில் ரஜினி,கமல், விஜயகாந்த், கார்த்திக் போன்ற நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா.பானுப்ரியா பல மொழிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் முதன் முதலில் தன்னுடைய 17-வது வயதில் நடிக்க ஆரம்பித்தார்.

இவருடைய முதல் தமிழ்த் திரைப்படம், மெல்ல பேசுங்கள் 1983-ம் ஆண்டு வெளியானது. தெலுங்கில் இவர் நடித்த முதல் திரைப்படம் சித்தாரா (1983).பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால், பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் கதாப்பாத்திரமாகவே அமைந்தது.

இவருடைய நடிப்பும் நடனமும் சக கலைஞர்களால் பாராட்டப்பட்டது.இவர் தன்னுடைய கண்களால் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிறந்து விளங்கினார். அதன்காரணமாக இவருடைய ஐ-டெக்ஸ் (Eyetex) விளம்பரமானது மிகவும் பிரபலம்.

இவருடைய தங்கை நிஷாந்தி, (சாந்திப்பிரியா) என அறியப்பட்ட இவர், பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நிஷாந்தி எங்க ஊரு பாட்டுக்காரன் (1988) திரைப்படம் மூலமாக பிரபலமானார். நிஷாந்தி 2002-ம் ஆண்டு தொலைக்காட்சித் தொடரான ஆர்யமான்-லும், நடித்தார். பானுப்ரியாவின் மற்றொரு தங்கையான ஜோதிப்ரியாவும் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 1998ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஆதர்ஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கடந்த 2003ம் ஆண்டு அபிநயா என்ற பெண் குழந்தை பிறந்தது.

கடந்த 2005ம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக கணவனை பிரிந்தார். அதன்பிறகு விவாகரத்து பெற்று கைக்குழந்தையுடன் சென்னை திரும்பினார்.கட்சியாக தமிழில் வெளியான 3இல் நடித்திருப்பார். இவர் தற்போது பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சன் தொலைகாட்சியில் யமுனா என்ற தொடரின் நடித்திருப்பார்.
50 வயதை கடந்தும் இன்றும் மிகவும் அழகாக இருகிறாரே என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.