பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அந்த சீரியலில் ஹீரோ மாற்றப்பட்டாலும் எல்லா பகுதிகளிலும் ஹீரோயினாக நடித்தவர் ரச்சிதா.

இந்த சீரியலின் மூலமாகவே இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையே சிறிது காலம் ஜி தமிழ் சீரியலில் அவரது கணவர் தினேசுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு மாறியுள்ளார்.

அதில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் தற்போது நடித்து வருகிறார்.இதற்கிடையே அடிக்கடி அவரது புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது கையில் குழந்தையுடன் புடவை அணிந்துகொண்டு மிகவும் அழகான சிரித்தவாறு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் ‘மகாலட்சுமி போல் இருக்கிறீர்கள்’ என கமெண்ட் செய்துள்ளனர். இன்னும் சிலர், ஒரே ஒரு வீடியோ ஒட்டு மொத்த சமஸ்தானமும் ஆடிப்போச்சு.. நான் கூட உங்க குழந்தைன்னு நெனச்சிட்டேன் என்று கலாய்த்து வருகிறார்கள்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.