மிகவும் கிழிந்த உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலா பால்…விளாசும் நெட்டிசன்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அமலா பால்.
தமிழில் மட்டுமல்ல மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய பல்வேறு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வந்தார்.

மேலும் சென்ற ஆண்டு வெளியான ஆடை படத்தின் மூலம் சோலோ ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். பல விமர்சனங்களை கடந்து இப்படம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

தற்போது தமிழில் அதோ அந்த பறவை போல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கிழிந்த உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் முகம் சுளித்து வருகின்றனர்.