அடுத்த ஆண்டு சிஎஸ்கே-அணியில் விளையாடவே வாய்ப்பில்லாத 5 வீரர்கள் இவர்கள் தானாம்! ரசிகர்கள் அதிர்ச்சி !

ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியில் அடுத்த ஆண்டு குறிப்பிட்ட ஐந்து வீரர்கள் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டோனி தலைமையிலான சென்னை, பிளே ஆப்பிற்கு கூட தகுதி பெறாமல், லீக்கில் இருந்து வெளியேறியது.

இதனால் ஒட்டு மொத்த சென்னை ரசிகர்களும், அணியில் மாற்றம் கொண்டு வர வேண்டும், வயதான வீரர்கள் நிறைய பேர் இருக்கின்றனர் என்று கூறி வருகின்றனர்.

அடுத்த முறை நிச்சயமாக ஒரு வலுவான அணியாக சென்னை அணி வர வேண்டும், அதற்கு இப்போதே சென்னை அணி நிர்வாகம் தயாராக வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதற்கு ஏற்ற வகையில், சென்னை அணி நிர்வாகமும், சில வீரர்களை கழற்றிவிட முடிவு செய்துள்ளதாம். அதில் இந்த முறை சொதப்பிய கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், பல கோடி ரூபாய்க்கு எடுத்தும் ஏமாற்றிய பியூஸ் சாவ்லா, முரளி விஜய் மற்றும் வயது மூப்பின் காரணமாக இம்ரான் தாகீர் ஆகியோர் பெயர் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சென்னை அணிக்காக விளையாடி வந்த வாட்சன், அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, இந்த ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.