2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பிகில்.

பிகில் படத்தில் விஜய்யுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆனந்தராஜ் கூட்டணி போட்டு நடித்திருந்ததால் அந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது உண்மைதான்.

பிகில் படத்திற்கு முன்னர் காமெடி கதாபாத்திரங்களில் அனைவரையும் ரசிக்க வைத்தவர் ஆனந்தராஜ். இதனால் விஜய் உடன் அவர் காமெடி காட்சிகள் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.

ஆனால் பிகில் படத்தில் ஒரு ஊறுகாயை அளவுக்கு கூட ஆனந்தராஜ் காட்சிகள் இல்லை என்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.

படம் ரிலீஸாகி கிட்டதட்ட ஒரு வருடம் ஆன நிலையில் இன்று வரை ஆனந்தராஜ் பிகில் படத்தை பார்க்க வில்லையாம். மேலும் தனக்காக மிகவும் சுவாரசியமாக எடுக்கப்பட்ட அறிமுக காட்சியைக் கூட கட் செய்துவிட்டார்கள் என கோபம் அடைந்துள்ளார்.

ஆனந்தராஜ் நடித்த அனைத்து காட்சிகளையும் தூக்கி விட்டாராம் அட்லீ. அப்புறம் எதற்கு என்னை படத்தில் சேர்க்க வேண்டும் என மிகவும் கோபப்பட்டுள்ளார் ஆனந்தராஜ். இனி அட்லீ படங்களில் நடிக்க மாட்டேன் எனவும் தெரிவித்து விட்டாராம்.

உண்மையில் ஆனந்தராஜ் கதாபாத்திரம் இன்னும் அதிகம் காட்டப்பட்டிருந்தால் பிகில் படம் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும் என்ற கருத்துக்கள் பரவலாக உள்ளன.

மேலும் விஜய்க்கு தன்னுடைய காட்சிகள் நீக்கப்பட்டது சுத்தமாக தெரியாது எனவும், விஜய்யை இதில் இழுக்க வேண்டாம் என சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.