குட்டியான ட்ரவுசரில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள மூக்குத்தி அம்மன் பட நடிகை…மிரண்டுபோன ரசிகர்கள்

கேரளாவில் பிறந்து தமிழ்நாட்டில் வசிப்பவர் ஸ்மிருதி வெங்கட். மவுனவலை என்ற படத்தில் நடித்தார். அந்த படம் வெளிவரவில்லை. அதன்பிறகு தடம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தார்.

தற்போது அவர் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். கடவுள் என்ன வரம் வேண்டும் என கேட்கிறது பெருசா ஏதாவது கேளு என்று ஆர்.ஜே.பாலாஜி கேட்கும் போது எனக்கு ஒரு நாள் லீவு வேணும்.. ஒரு நாளாவது அந்த தைல வாசனை இல்லாம தூங்கனும் என்று கேட்கும் காட்சி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த படம் தவிர, தீர்ப்புகள் விற்கப்படலாம், அக்னி நட்சத்திரம் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் முழுமையான ஹீரோயினாக நடிக்கும் படம் பற்ற வைத்த நெருப்பொன்று. இதில் அவர் புதுமுகம் தினேசுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இவர்களுடன் புதுமுகங்கள் அபிலாஷ், மாரிஸ், ஹரி, ரஞ்சித், திரு ஆகியோர் நடித்துள்ளனர். நூதன சைபர் திருட்டு, டெலிவரி நெட்வொர்க் மூலம் நடக்கும் சமூக விரோத செயல்கள் என பல தற்கால சமூக பிரச்சனைகளைப் பேசும் படமாகும்.

அறிமுக இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்குகிறார். இதனை இருவர் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.
பல வெற்றிப் படங்களில் இணை – துணை இயக்குனராக பணியாற்றியவர் சரண். இவர் இயக்குனராக அறிமுகமாகும் படம் அக்னி நட்சத்திரம். இந்த படத்தில் நாயகனாக விதார்த் நடிக்கிறார்.

மேலும், இயக்குநர் விஜய்யின் சகோதரர் உதயாவும், இந்த படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நாயகியாக தடம் பட நாயகி ஸ்மிருதி வெங்கட் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குட்டியான ட்ரவுசரில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.