தல அஜித்தின் மனைவி ஷாலினியுடன் நடிகர் சூர்யா எடுத்த புகைப்படம் ! நீங்களே பாருங்க வைரலோ வைரல் !

நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்களுக்கு தற்போது இந்திய அளவில் வரவேற்பு அதிகமாக உள்ளது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம், ரசிகர்களின் பேராதரவை பெற்றதோடு.

தென்னிந்திய திரையுலகின் பல நட்சத்திரங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் தற்போது இவர் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நவரச என்ற Anthology திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் தமிழ் சினிமாவின் மற்றுமொரு உச்சநட்சத்திரமான அஜித்தின் மனைவி ஷாலினியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் இனைந்து ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த புகைப்படத்தில் ஷாலினி, ஜோதிகா, ராதிகா ரீமாசென் உள்ளிட்டோரும் உள்ளனர், இதோ அந்த புகைப்படம்.