மிக எளிமையாக நடந்து முடிந்த சிலம்பாட்டம் பட நடிகை சனா கான் திருமணம் ! மாப்பிள்ளையை பாத்து ஷாக் ஆகாதிங்க

சிம்பு நடிப்பில் வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சனா கான். இதை தொடர்ந்து இவர், தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது இந்தி படம் ஒன்று உருவாகி வருகிறது.இந்நிலையில் தற்போது சனா கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு திடீர் முடிவை அறிவித்துள்ளார்.

இனிமேல் திரைப்படம் உள்ளிட்ட எவற்றிலும் நடிப்பதில்லை. இனி இறைவனின் ஆணைப்படி, தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு வாழ்வது என முடிவெடுத்து இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் டிக்டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இவர் பின் தொடர்ந்தவர்கள் அதிக பேர். இந்நிலையில் சனாகானின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக தான் திருமணம் செய்துகொண்டதாகக் கூறியுள்ளார். சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அவர் திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரும் கேக் வெட்டும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.