நடிகர் பிரசாந்த் இந்த படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் அஜித் மற்றும் விஜயை விட டாப்!

தமிழ் சினிமாவில் ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் 2000களில் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்ததோடு, பல இளம் பெண்களின் மனதில் கனவு நாயகனாகவும் இடம் பிடித்திருந்தார்.

மேலும் தற்போது டாப் ஹீரோக்களாக இருக்கும் தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோர் நடிக்க வருவதற்கு முன்பே நடிகர் பிரசாந்த் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி உச்ச நாயகனாக விளங்கிய பிரசாந்துக்கு ‘வின்னர்’ படம் தான் கடைசியாக ஹிட்டடித்த படம். அதன்பிறகு, அவர் நடித்த ஜாம்பவான், தகப்பன் சாமி, மம்பட்டியான், சாகசம் போன்ற அனைத்து படங்களும் வரிசையாக படுதோல்வியை சந்தித்தன.

அதை தொடர்ந்து பிரசாந்த் வினயவிதேயராமா என்ற தெலுங்கு படத்தில் துணை நடிகராக நடித்தது தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பிரசாந்தின் மார்க்கெட் குறைந்ததற்கு முக்கிய காரணம், அவர் டாக்டர் கலைஞர் இயக்கத்தில் நடித்த பொன்னர்- சங்கர் திரைப்படம் தான். ஏனெனில் அந்த திரைப்படம் பிரம்மாண்டமான செலவில் உருவான போதும், பெரும் தோல்வியை சந்தித்தது.

இதனால் நடிகர் பிரசாந்த்தை வைத்து அதிக பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்க எந்த ஒரு தயாரிப்பாளரும், இயக்குனரும் முன்வரவில்லை என்று கூறுகின்றனர்.

அந்தப் படத்தை தொடர்ந்து பிரசாந்த், குடும்ப கதையை ஒதுக்கி, ஆக்சன் கதையை மட்டுமே தேர்ந்தெடுத்தால் அவருடைய மார்க்கெட் டோட்டலாக காலியானதாம். இந்தத் தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு, பிரசாந்த் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.