‘மாநகரம்’, ‘கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து படம் இயக்குவது அனைவரும் அறிந்ததோடு, அந்த படத்திற்கு ‘விக்ரம்’ என்று தலைப்பு வைத்திருப்பதும் அறிந்தது தான்.

‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், அப்படத்திற்கு புது சிக்கல் ஒன்று வந்துள்ளது. அதனால், படப்பிடிப்பை நிறுத்திய கமல்ஹாசன் வேறு படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால நின்று போன நிலையில், தற்போது நிலைமை சரியான பிறகும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதனால், கோபமடைந்த இயக்குநர் ஷங்கர், தனது நேரம் வீணாவதால், படப்பிடிப்பை விரைவில் தொடங்க வேண்டும், இல்லை என்றால் வேறு படத்தை தொடங்க தனக்கு அனுமதியளிக்க வேண்டும், என்று கோரி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, பலகட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது. கமல்ஹாசனும் தொடர்ந்து 28 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். தேவைப்பட்டால் மேலும் சில நாட்கள் கால்ஷீட் தருவதாக கூறியிருக்கிறாராம். இதனால், இந்தியன் 2 படப்பிடிப்பை டிசம்பர் மாதம் தொடங்க உள்ளனர்.

இந்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்காததால் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க தொடங்கிய கமல்ஹாசன், தற்போது அப்படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டாராம். ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை முடித்துக் கொடுத்த பிறகே ‘விக்ரம்’ படப்பிடிப்பை தொடரலாம் என்று கூறிவிட்டாராம்.