இப்ப மட்டும் எங்க போச்சு உங்க கொள்கை பகுத்தறிவு? – திமுகவை விளாசும் நெட்டிசன்கள்

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை துவங்கி விட்டன. குறிப்பாக திமுக பிரச்சாரத்தை துவங்கி விட்டது. அக்கட்சி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. சமீபத்தில் கூட தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அய்யர் கொடுத்த திருநீரை நெற்றியில் பூசாமல் கீழே போட்டது கடும் கண்டனத்திற்கு ஆளானது. திமுக பகுத்தறிவு கட்சி என்றால் இதுபோன்ற விழாவிற்கு ஸ்டாலின் செல்லாமல இருந்திருக்கலாம் என பலரும் கூறியிருந்தனர்.

தற்போது அதுபோன்ற சர்ச்சையில் அவரின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சிக்கியுள்ளார். கடந்த சில தினங்களாக அவர் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். கொரோனா காலத்தில் கூட்டம் கூட்டுவதை காரணம் காட்டி போலீசார் அவரை தினமும் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுகவின் கடவுள் எதிர்ப்பு கொள்கைக்கு மீறி அவர் செய்துள்ள செயல் கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளாகியுள்ளது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனகர்த்தரிடம் அவர் ஆசி பெற்ற புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. தேர்தலுக்காக, ஓட்டுக்காக திமுக தனது கொள்கை, பகுத்தறிவை மீறி இப்படியெல்லாம் செய்ய வேண்டுமா? என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஹிந்து கடவுள் என யாருமில்லை. அவர்கள் இருந்ததற்கான ஆதாரம் இல்லை எனக்கூறி வரும் திமுக, இப்படி ஓட்டு அரசியலுக்காக தனது கட்சியின் கொள்கையை காற்றில் பறக்கவிட்டு விட்டது என்றும் விமர்சித்து வருகின்றனர்.