பிக் பாஸ் புகழ் முருகதாஸ் மீது மானநஷ்ட ஈடு வழக்கு ! வெளியான அதிர்ச்சி உண்மை இதோ !

உலக நாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 4 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானாகியுள்ளார் மாடல் பாலாஜி முருகதாஸ்.

இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் மீது, M/s. Razzmatazz Group & Miss Tamil Nadu and Miss South India, திரு.ஜோ மைக்கில் பிரவின் என்பவர் மானநஷ்ட ஈடு கேட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகாரில் பிக்பாஸ் வீட்டில் வைத்து பாலாஜி அவரையும் அவர் கம்பெனியையும் அதில் கலந்துகொண்ட பெண்களையும் தவறாக சித்தரித்ததாக கூறியுள்ளார்.

இந்த விஷயத்திற்காக பாலாஜி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் ஒரு கோடி கேட்டு பாலாஜி மீது வழக்கு தாக்கல் செய்ய போவதாகவும் அறிவித்துள்ளார் ஜோ மைக்கில்.

இது தற்போது பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.