கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பார்த்தபடி நேற்று சுசித்ரா வெளியேறினார்.

தனது தனது வெளியேற்றம் தனக்கு பெரும் ஆச்சரியத்தை அளிப்பதாகவும் மக்கள் அவசரப்பட்டுவிட்டதாகவும் சுசித்ரா கூறினார்.

சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பின்னர் முதல் வாரம் என்பதால் அவர் நாமினேசன் செய்யப்படவில்லை. அதேபோல் கடந்த வாரம் அவர் நாமினேஷன் இருந்தாலும் தீபாவளியை கணக்கில் கொண்டு எவிக்சன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

எனவே முதன்முதலாக நாமினேசன் சிக்கிய சுசித்ரா வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வெளியேற்றத்துக்கு பின்னர் கமல்ஹாசனிடம் அவர் பேசியபோது ’மக்கள் அவசரப்பட்டு விட்டார்கள் என்றும் இன்னும் தனக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என்றும் இந்த நிகழ்ச்சியில் கல்நதுகொள்ள நான் மிகவும் விரும்பி வந்தேன் என்றும் வீட்டில் உள்ளவர்கள் குரூப்பாக சேர்ந்து கொண்டு என்னை நாமினேஷன் செய்து வெளியேற்றிவிட்டதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது அவருக்கு கொடுக்கப்பட்ட செடி உண்டியலை தூக்கி போட்டு உடைத்து விட்டு கோபத்துடன் சென்றார் என்பதும் அவரை மற்ற போட்டியாளர்கள் கட்டிப்பிடித்து வழியனுப்பினர்.

ஆனாலும் அர்ச்சனா மற்றும் நிஷா ஆகிய இருவரும் அவரது வெளியேற்றத்தை கண்டு கொள்ளாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததோடு, நிஷா அவரது முகத்தில் சற்று கோபத்தினைக் காட்டியது நேற்றைய நிகழ்ச்சியில் நன்றாகவே அவதானிக்கப்பட்டது.