தனது முதல் இன்னிங்கிஸில் சாக்லேட் பாயாக, பெண்களின் பாவரிட் நாயகனாக இருந்தவர், ரீ எண்ட்ரியில் வேற லெவல் மாஸ் நடிகராக மாறியது இன்று கோலிவுட்டில் பலருக்கு ஆச்சர்யம் தரும் விஷயம் தான். மணிரத்தினம் சாய்ஸ் ஆச்சே, எப்படி மிஸ் ஆகும் என சொலிகின்றனர் கோலிவுட் ஆசாமிகள்.

மனிதர் தற்பொழுது ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என அசத்தி வருகிறார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்பு வருகின்றது. அந்த வகையில் தெலுங்கில் இவர் வில்லனாக நடிப்பது உறுதியாகி உள்ளது.

ஆச்சார்யா – தனது அப்பா சீரஞ்சீவியை வைத்து ரேம் சரண் தறிக்கும் படம். இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக சிரஞ்சீவி நடிக்கிறார். கொரட்டலா சிவா இயக்குகிறார். இப்படத்தில் சோனு சூட் மற்றும் தணிகெல்லா பரணி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கதாநாயகியாக காஜல் அகர்வால் ஹனி மூன் முடிந்த உடன் வந்து நடிக்கிறார். முதலில் கதாநாயகியாக நம்ம ஊர் திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விலகி விட்டார்.

ஐதராபாத் பிலிம் சிட்டியில் நடைபெறும் படப்பிடிப்பில் விரைவில் சிரஞ்சீவி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகின்றன. வில்லன் ரோலுக்கு பல முன்னணி நடிகர்களை அணுகியும், ஒர்க் அவுட் ஆகவில்லை தயாரிப்பு தரப்பிற்கு. எனவே ஏற்கனவே ‘துருவா’ படத்தில் தனக்கு வில்லனாக நடித்த அரவிந் சாமியிடம் நேரடியாக பேசி, தனது அப்பாவுக்கும் வில்லனாக்கியுள்ளார் ராம் சரண்.விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்.விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்.