பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒன்று. இதில் வரும் அந்த பாரதி மற்றும் கண்ணம்மா கேரக்டர் ஜோடிக்கு பெரும் ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது.

அண்மையில் கூட கண்ணம்மா கையில் பேக் எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றி காட்சி மீம் ஆக சமூக வலைதளங்களில் பல கோணங்களில் பரவி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

தற்போது இருவரும் காற்று மாசுபாடை குறைக்க வாரம் ஒரு நாள் நாம் நமது வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்போம் என சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.