தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அனுஷ்கா.

இவர் தெலுங்கில் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும், அருந்ததி எனும் ஒரே ஒரு திரைப்படம் தான் இவரை தென்னிந்திய அளவில் புகழ் பெற செய்தது.

மேலும் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பலருடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார்.

திரையுலகில் நடிகர் நடிகைகள் இணைந்து, நெருக்கமாக நடிக்கும் பொழுது காதல் ஏற்படுவது வழக்கம் தான்.

அப்படி ஏற்பட்ட ஒரு காதல் தான் நடிகை அனுஷ்கா மற்றும் நடிகர் ராணாவின் காதல். இவர் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர்.

ஏன் நடிகை அனுஷ்காவுடன் நடிகர் ராணா லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்துள்ளாராம். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணத்தினால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

மேலும் சமீபத்தில் நடிகர் ராணா, மிஹீகா பஜாஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.