வலிமை படப்பிடிப்பில் விபத்தை சந்தித்த அஜித், உண்மையிலேயே என்ன நடந்தது தெரியுமா ? வெளியான அதிர்ச்சி உண்மை !

தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் ஹைதராபாத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று திடீரென வலிமை படப்பிடிப்பு தளத்தில் அஜித்திற்கு விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. அதன்படி கடந்த நவம்பர் 8ம் தேதி ஒரு அதிரடியான பைக் சேசிங் காட்சி செய்த போது, அஜித் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு சிறு காயங்களும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக முதலுதவி செய்யப்பட்டுள்ளது

ஆனால் தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாதென அதே காயங்களுடன் தொடர்ந்து அடுத்துடுத்த நாட்களில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்து கொடுத்துள்ளார் அஜித். மேலும் தற்போது ஹைதராபாத்தில் அவர் ஆயுர்வேத சிகிட்சை பெற்று வருவதாக தெரிகிறது.