நடிகைகள் என்றாலே தொழிலதிபர்களை தான் அதிகமாக திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள் என்ற விமர்சனம் பொதுவாக கூறப்பட்டு வருகிற ஒன்று மட்டுமல்ல, அது நிஜத்திலும் நடக்கிறது.

காரணம் தொழிலதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை திருமணம் செய்துகொண்டால்தான் தாங்கள் நினைத்தபடி சொகுசான வாழ்க்கையை வாழலாம் என்பது அவர்களின் ஆசை என உலகம் கூறினாலும், இதனை மறுக்கும் நடிகைகள் இதில் இருப்பது காதல் என்கின்றனர்.

அப்படி பணத்துக்காக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் நடிகைகள் இதோ,

நஸ்ரியா
பல தமிழ் படங்களில் நடித்துள்ள நஸ்ரியா மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பகத் பாசில் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதுதான். திருமணத்தின்போது நஸ்ரியாவிற்கு 21 வயதும் பகத் பாசில் வயது 34 இருந்தது. இருவர்களுக்கும் 13 வயது வித்தியாசம் உள்ளது.

ரீமாசென்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரீமாசென். வர் 2012ஆம் ஆண்டில் மும்பையை சேர்ந்த தீப் கரன் சிங் என்ற பிஸ்னஸ் மேனனை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரீமசென் தனது 33 வயதில் திருமணம் செய்துகொண்டார், இவருடைய கணவருக்கு வயது 42 ஆக இருந்தது இருவர்களுக்கும் ஒன்பது வயது வித்தியாசம் இருக்கிறது.

சந்தியா
சந்தியா நடித்த முதல் படம் காதல் இவர் நடித்த முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆனது. காதல் சந்தியா சென்னையில் ஐடி கம்பெனியை நடத்தி வரும் வெங்கட் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது சந்தியாவிற்கு 27 வயதும் இவருடைய கணவருக்கு 41 வயதும் இருந்தது.

மோனிகா
மோனிகாவிற்கு திருமணத்தின் பொழுது வெறும் 27 வயது தான். ஆனால் இவருடைய கணவருக்கு 50 வயதாக இருந்தது. இருவரும் 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர் கணவர் பெயர் மாணிக் ஆகும். மோனிகா மற்றும் மாணிக் இருவருக்கும் 22 வயது வித்தியாசம் உள்ளது. இதில் மிகவும் முக்கியமான விஷயம் மோனிகாவின் கணவர் அவருடைய அப்பாவின் நெருங்கிய நண்பர் ஆவார்.

ஸ்ரீதேவி
போனி கபூர் ஒரு தயாரிப்பாளர் ஆவார். போனி கபூருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருந்த நிலையில், ஸ்ரீதேவிக்கு போனி கபூருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு முன்னரே ஸ்ரீதேவி கர்ப்பமாகிவிட்டதால் இப்படி திருமணம் நடந்தது என கூறப்பட்டது.

ஆனால், போனி கபூர் தயாரிப்பாளர் என்பதால் அதனை ஸ்ரீதேவி பயன்படுத்திக்கொண்டார் என்ற குற்றசாட்டை போனிகபூரின் முதல் மனைவி முன்வைத்தார்.