உண்மையிலேயே பாடகி சுசித்ராவின் முதல் கணவர் இந்த பிரபலமா? யாரும் அறிந்திராத அதிர்ச்சி தகவல் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

பாடகி சுசித்ரா அண்மையில் வைர்ல்கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார்.

வந்த வேகத்தில் போட்டியாளர்களைப் பற்றி வெளியில் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறி பரபரப்பு உண்டாக்கினார்.

மேலும், அவர் பாலாவுடன் நட்பாக இருப்பது ஷிவானிக்கு பிடிக்கவில்லை என்பது போல் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுசித்ராவின் முன்னாள் கணவரான நடிகர் கார்த்திக் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் பற்றி ஒரு பதிவிட்டுள்ளார்.

ரசிகர் ஒருவர் ‘இப்போ பிக்பாஸ் மீம்ஸ் பார்க்கும்போது ரொம்ப ஹாப்பியா இருக்கீங்களா’ என்று கிண்டலாக கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் “என்னுடைய முன்னாள் மனைவியைப் பற்றி நான் எப்போதும் உயர்வாக நினைத்து, பாசமாக தான் இருக்கிறேன்.

உங்கள் யாருக்கும் அவரைப்பற்றி தெரியாது. தெரிந்தது போல் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார். பலருக்கு சுசித்ராவின் முன்னால் கணவரை தெரியாத நிலையில் குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.