நெல்லை பாளையங்கோட்டை இலந்தைகுளம் சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்.

இவருடைய, மகன் நல்லையா என்ற குட்டி (30), மகள் சரஸ்வதி (25). இவருடைய மகள் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அண்ணன்-தங்கைக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவத்தின் அன்று, இரவில் சரஸ்வதி அங்குள்ள ஒரு நல்லியில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குட்டி, சரஸ்வதியை அழைத்து பேசிக்கொண்டிருந்தார்.

இதில், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரம் அடைந்த குட்டி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரஸ்வதியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, குட்டிதாஸ் அரிவாளுடன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இதன்பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த பெருமாள்புரம் போலீசார் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, போலீசாரிடம் குட்டிதாஸ் அளித்த வாக்குமூலத்தில் எனது தங்கை சரஸ்வதி நர்சிங் விட்டு வேலைக்கு செல்கிறேன் என கூறி கொண்டு கவரிங் நகை விற்பனையில் ஈடுபட்டார்.

மேலும், டெய்லரிங் எம்பிராய்டரி பொருட்களை பல இடங்களுக்கு சென்று விற்பனை செய்து வந்தார்.

எனது பேச்சை கேளாமல் அடிக்கடி விற்பனை எனக்கூறி கொண்டு சிலரிடம் செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

இதை நான் கண்டித்தேன் பொருட்கள் விற்பனை வேண்டாம் என கூறினேன். அதை அவள் கேட்காததால் வெட்டி கொன்றேன் என தெரிவித்துள்ளார்.