ஒரு காலத்தில் சிம்புவை ஏளனமாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் மாநாடு. பல பஞ்சாயத்துகளுக்கு பிறகுதான் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்நிலையில் திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மாநாடு படத்தின் படப்பிடிப்பு கைவிடப்பட்டது. கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக படப்பிடிப்பு இல்லாத நிலையில் அதை பயன்படுத்தி சிம்பு தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து இளமை தோற்றத்திற்கு வந்துள்ளார்.

இதுவே ரசிகர்களுக்கு தனி உற்சாகத்தை கொடுத்த நிலையில் இன்று மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

வெளியான சில மணி நேரங்களிலேயே மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காட்டுத்தீ போல் வைரல் ஆகி விட்டது.

சிம்புவின் செகண்ட் இன்னிங்ஸ் மிகப் பிரமாதமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.