நமது உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளவே குளிக்கிறோம்.

அந்தவகையில் தினம் குளிக்கும் தண்ணீரில் உப்பு கலந்து குளித்தல் நன்மைகள் கிடைக்கிறது.

இந்த உப்பானது கடலிலிருந்து தயாரிக்கப்படும் அதாவது எந்த கலப்படமுமின்றி நேரடியாக ஆவியாதலிலிருந்து பெறப்படுகிறது. சமயலுக்குப் பயன்படுத்தும் அதே கடல் உப்பு என்பது சமையலுக்கு ஏற்ப சில தயாரிக்கப்படுவதால் அதன் தாதுக்கள் குறையும்.

ஆவியாதல் மூலம் நேரடியாகப் பெறப்படும் இந்த உப்பில் விட்டமின் தாதுப்பொருட்கள் இருப்பதால் சருமத்திற்கு மிகவும் நல்லது. இந்த கடல் உப்பில் மெக்னீசியம், கால்சியம், ஸிங்க், இரும்பு, பொட்டாசியம் போன்ற மினரல்களைக் கொண்டிருக்கிறது.

இந்த உப்பை நீங்கள் குளிக்கும் தண்ணீரில் அளவுக்கு ஏற்ப 3 முதல் 10 கப் வரை சேர்க்கலாம் என்று கூறப்படுகிறது. சாதாரண நீர்த்தொட்டி அளவில் 1/4 கப் கடல் உப்பு சேர்க்கலாம் என ஹெல்த் லைன் இணையதளம் கூறுகிறது.

அந்த தண்ணீரானது உங்கள் உடலின் வெப்பநிலையிலிருந்து 2 டிகிரி கூடுதலான வெப்பநிலையில் இருக்க வேண்டும். குறைந்தது அந்த உப்பு 15 – 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வேண்டும்.

இவ்வாறு குளிப்பதால் தசைகள் இலகுவாகி உடலுக்கு ரிலாக்ஷேசன் கிடைக்கிறது. உடல் வலி , தசை வலி இருந்தாலும் சரியாகும்.

அதுமட்டுமன்றி சருமத்திற்கும் நல்ல ஆரோக்கியம் , ஹெல்தியான சருமத்தைப் பெறலாம். அதோடு இரத்த ஓட்டம் சீராவதால் சருமம் பொலிவாக மாறுவதையும் உணர முடியும்.

எப்படியிருந்தாலும் இந்த குளியலை நீங்கள் பின்பற்றலாமா என மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று விடுவது நல்லது.