தினமும் கேரட் சாப்பிட்டால் இந்த நோயிலிருந்து முற்றிலுமாக விடுபடலாம்…சூப்பர் தகவல் இதோ

ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பதற்கு மட்டுமல்ல சாப்பிடும்போதும் மொறு மொறுவென குறைந்த இனிப்புச் சுவையில் நன்றாக இருக்கும்.

கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்து குறைக்கப்படும்.

உடலுக்கு குளிர்ச்சியை வழங்க கூடியவற்றில் கேரட் முதன்மையானது. தினமும் காலை எழுந்ததும் சுத்தமான தண்ணீரில் ஒரு முழு கேரட்டை கழுவி விட்டு சாப்பிட்டு வந்தால் உடல்சூடு குறையும். கத்தியால் வெட்டாமல் கடித்து சாப்பிடுவது நல்லது.

உயிர் சத்துகள் நிறைந்த கேரட்டை பச்சையாக உண்பது நல்லது. நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகளும் நிறைந்துள்ளதால் ஜீரணத்திற்கு உதவுகிறது. மாலைக் கண் நோயை தடுக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் கேரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரத்தத்தை சுத்தப்படுத்தவும், விருத்திச் செய்யவும் பயன்படுகிறது. வாய் துர்நாற்றத்தை போக்கும். குடல் புண்கள் வராமல் தடுக்கும்.

கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.

தினமும் கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றத்தைப் பற்றி பார்ப்போம்

தினமும் காலையில் கேரட்டை நறுக்கி சிறிது உப்பு தூவி சாலட் போல செய்து சாப்பிடலாம். கேரட் ரத்தத்ததை சுத்தப்படுத்தும்.
தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வருவதால் தோல் சுருக்கங்கள் மெல்ல நீங்கி உடல் பொலிவு பெறும்.
காலை நேரங்களில் சர்க்கரை சேர்க்காமல் அரை ட்ம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் வயிற்று புழுக்கள் வெளியேறி, வயிறு சுத்தமாகும்.
தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
கேரட்டை வேக வைப்பதன் மூலம் அதன் கடினமான சுவர்களில் அடைபட்டிருக்கும் பீட்டா கரோட்டின் வெளிவருகிறது. கேரட்டை சமைக்கும் போது சிறிது வெண்ணெய் சேர்த்தால் அதன் மொத்த சத்தையும் உடல் நன்றாக எடுத்து கொள்ளும்.
பீட்டா கரோட்டின் நமது உடலுக்கு சென்றவுடன் வைட்டமின்-ஏ வாக மாறுகிறது. இது கண் பார்வையை தெளிவாக்குவதுடன் சரும பளபளப்புக்கும் உதவுகிறது.
மாலைக்கண் நோய் வர பல காரணம் உண்டு. அதில் வைட்டமின் – ஏ குறைபாட்டால் இந்நோய் வந்தால் மட்டும் கேரட் குணமாக்கும்.