மறைமுகமாக ரம்யா பாண்டியனுக்கு ரூட்டு போடும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா ? படு மோசமாக மாமா வேலைபார்க்கும் அர்ச்சனா!

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் லவ் ட்ராக் தொடங்கிவிட்டது.

ஏனென்றால் ஷிவானிக்கும் பாலாஜிக்கும் இடையே அவ்வப்போது காதல் காட்சிகள் நிகழ்ந்து கொண்டிருப்பதால் பிக்பாஸ் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

அதேபோல் தற்போது இரண்டாவது காதல் ஜோடியாக ரம்யா பாண்டியன்-சோம் சேகரும் மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது.

ஏனெனில் நேற்று நடந்த ‘மணிக்கூண்டு’ டாஸ்கின் மூலம் அர்ச்சனா முன்னிலையில் ரம்யா பாண்டியன் சோம் சேகருக்கும் இடையே பெண் பார்க்கும் படலம் அரங்கேறியது.

அதைப்போல் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ‘பாட்டி சொல்லை தட்டாதே’ என்ற டாஸ்கின் மூலம் கணவன் மனைவியாக ரம்யா பாண்டியனும் சோம் சேகரும் நடித்தபோது, அவர்களுக்கு இடையே ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அர்ச்சனா அவ்வப்போது நினைவுறுத்தி கொண்டே இருந்தார்.

எனவே பிக்பாஸ் மாமா வேலை பார்ப்பது ரசிகர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் அர்ச்சனாவும் சேர்ந்து மாமி வேலை பிக்பாஸ் வீட்டில் பார்ப்பதால் இரண்டாவது காதல்ஜோடி உதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.