பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது கிட்ட தட்ட 50 நாட்களை எட்ட உள்ளது. பிக்பாஸ் போட்டியாளர்கள் பாதி கிணற்றை தாண்டியது போல் தெரிந்தாலும், இனி தன் கடுமையான போட்டிகள் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவே கூறப்படுகிறது.

மேலும், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யாரும் வெளியேற்றப்படாத நிலையில், இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் உள்ள, சோம், சம்யுக்தா, ரியோ ராஜ், அனிதா, ஆரி, சுசித்ரா மற்றும் பாலாஜி ஆகியோரில் யார் வெளியே செல்வார் என்கிற எதிர்பார்ப்பும் அதிக அளவு உள்ளது.

இந்நிலையில், கடந்த வாரத்தை பொறுத்தவரை, சுசித்ரா தான் சரியாக விளையாட வில்லை என்பது போல் போட்டியாளர்கள் கூறி வருகிறார்கள்.

இவர் உள்ளே வரும் போது மக்களுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு தற்போது அப்படியே டவுன் ஆகிவிட்டது. எனவே இவர் தான் இந்த வாரம் குறைத்த வாக்குகள் பெற்று வெளியேறும் பிரபலமாக இருக்கலாம் என கூறுகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல், சுச்சி பிக்பாஸ் வீட்டில் நடந்துகொள்ளும் விதம் மற்றும் தனியாக போய் புலம்புவது என அனைத்துமே பார்வையாளர்களை வெறுப்படைய வைத்துள்ளது. எனவே சுச்சி வெளியேறுவதில் சந்தேகமே இல்லை என கூறுகிறார்கள்.