ஒரே வாரத்தில் பானை வயிறு போன்ற தொப்பையை குறைக்க உதவும் அதிசய பானம்!

அளவுக்கு அதிகமாக எதை சாப்பிட்டாலும், அது உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, உடல் எடையைக் குறைக்கும் திறனையும் பாதிக்கும்.

அதிலும் நீங்கள் கலோரி அதிகமான உணவுகளை அதிகமாக சாப்பிட்டவராயின், உங்கள் டயட்டில் உடலை சுத்தம் செய்யும் பானங்களை சேர்த்துக் கொள்வது நன்மை அளிக்கும்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் அவற்றில் உடல் எடையைக் குறைக்க உதவும் பிரபலமான பானமாக கருதப்படும் க்ரீன் டீ, எடையைக் குறைப்பதோடு, உடலில் ஆச்சரியப்படும் வகையிலான மாயங்களையும் ஏற்படுத்தும்.

எடை இழக்க உதவும் க்ரீன் டீ
உலகளவில் ஆரோக்கியமான பானமாக ஏராளமான மக்கள் குடித்து வரும் ஒரு பானம் தான் க்ரீன் டீ.
இதில் கேட்டசின்கள் என்று அழைக்கப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது தான் எடை இழப்பை மேம்படுத்துகிறது.
க்ரீன் டீயில் உள்ள கெமிக்கல்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை வேகமாக எரிக்க ஊக்குவித்து, எடை இழப்பிற்கு உதவுவதாக ஆய்வுகளும் கூறுகின்றன
உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புதமான பானங்களுள் ஒன்றாக க்ரீன் டீ கருதப்படுகிறது.
ஏனெனில் க்ரீன் டீயில் உள்ள செயலில் உள்ள உட்பொருட்கள் உடலின் இயற்கையான நச்சுநீக்கும் திறனை ஆதரிக்கின்றன. மேலும் க்ரீன் டீ குடிப்பதால் நொதிகளின் செயல்பாடு அதிகரித்து, நச்சுக்களை நீக்க கல்லீரலுக்கு ஆதரவளிக்கிறது.
நச்சுக்களை நீக்கி தொப்பையைக் குறைக்க உதவும் பானம்

உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை நீக்கி தொப்பையைக் குறைக்க க்ரீன் டீயை மட்டும் குடிக்கக்கூடாது.
அந்த க்ரீன் டீயைத் தயாரிக்கும் போது, அத்துடன் ஒருசில மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனால் அந்த க்ரீன் டீயின் சக்தியானது இருமடங்கு அதிகரித்து, இன்னும் சிறப்பான பலனைப் பெற உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
க்ரீன் டீ இலைகள் – 1 டேபிள் ஸ்பூன்
புதினா இலைகள் – 6-7
எலுமிச்சை – பாதி
தண்ணீர் – 2-3 கப்
தேன் – சுவைக்கேற்ப
தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அதை இறக்கி, அதில் க்ரீன் டீ இலைகள் மற்றும் புதினா இலைகளைப் போட்டு 2 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

பின்பு அதை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்தால், பானம் தயார்.