மறுமணம் செய்து வைக்க மறுத்த மருமகளை மாமியார் நாக்கு மற்றும் மூக்கை அறுத்த கொடூர சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சங்க்ரா காவல் நிலைய எல்லையில் வசித்து வந்த 30 வயதான பெண் ஒருவர் ஜோத்பூர் மருத்துவமனையில் மூக்கு மற்றும் நாக்கு அறுபட்ட நிலையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த, போலீசார் விசாரணை நடத்தியபோது, ஜானு கான் என்பவரை கைது செய்தனர்.

மேலும், பெண்ணின் மூக்கை அறுப்பதற்கு அவருக்கு உடந்தையாக செயல்பட்ட கூட்டாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர் விசாரணையில் மூக்கு அறுபட்ட இளம்பெண், விதவை என்பதும், அவரது மாமியாரான ஜானு கான், மருமகளை தனது உறவினர் ஒருவருக்கு மறுமணம் செய்து வைக்க தீர்மானித்தாகவும்,

அதற்கு அவர் சம்மதிக்காததால், உறவினர்களுடன் சேர்ந்து அவரது மூக்கு மற்றும் நாக்கை மாமியார் அறுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் அக்கம்பக்கத்தினர் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.