பாலாஜியை எதிர்க்க பிக்பாஸ் வீட்டிற்குள் 50-வது நாளில் நுழையும் வைல்ட் கார்ட் எண்ட்ரி ! பிக்பாஸ் வைக்கப்போகும் செக்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழில் பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக ஓடுகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்த இதுநாள் வரை எந்த ஒரு சுவாரஸ்யமான டாஸ்க்கும் கொடுக்கப்படவில்லை என்பது ரசிகர்களின் கருத்து.

தற்போது 48 மணி நேர டாஸ்க் ஒன்று செல்கிறது அது சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இல்லை என்கின்றனர்.

இந்த நிலையில் சீரியல் நடிகர் அசீம் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார் என்று கடந்த சில நாட்களாகவே செய்திகள் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதேபோல் அவரும் புகைப்படங்கள் போடும் போது விஜய் தொலைக்காட்சியை டாக் செய்தபடி போஸ்ட் போடுகிறார். அண்மையில் அவர் போட்ட பதிவின் கீழ் ரசிகர்கள் நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வாருங்கள், பாலாஜியை எதிர்க்க நீங்களே தகுதியானவர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரசிகர்களின் ஆசைப்படி பிக்பாஸ் குழு அசீமை வீட்டிற்குள் அனுப்பினால் கண்டிப்பாக பாலாஜிக்கு இணைவாக களமிறங்குவார்.

ரசிகர்களின் ஆசைப்படி பிக்பாஸ் குழு அசீமை வீட்டிற்குள் அனுப்பினால் கண்டிப்பாக பாலாஜிக்கு இணைவாக களமிறங்குவார்.