தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக வலம் வருபவர் விஷால். சமீபகாலமாக தொடர் வெற்றிப் படங்களை கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

இந்நிலையில் விஷாலின் காதல் கதை ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தெலுங்கு பெண் ஒருவருடன் திருமணம் செய்ய இருந்த விஷால் ஏன் திருமணம் செய்யவில்லை என்ற சீக்ரெட்டை உடைத்துவிட்டார் பயில்வான் ரங்கநாதன்.

பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஷாலுக்கு ஏன் திருமணம் நின்றது என்ற காரணத்தை கூறியுள்ளார்.

விஷால் முதலில் சரத்குமார் மகள் வரலட்சுமி காதலித்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன்பிறகு அவருடனான காதலை முறித்துக்கொண்டார்.

அதற்கு காரணம் இளம் நடிகை லட்சுமிமேனன் தானாம். பத்திரிகையாளர் பேட்டியில் லட்சுமிகரமான நடிகையைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

விஷால் லட்சுமிமேனனை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் திடீரென தெலுங்கு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.

ஆனால் நிச்சயதார்த்தத்திற்கு பிறகும் விஷால் லட்சுமி மேனனுடன் பேச்சுவார்த்தை வைத்திருந்ததால் தான் அந்த தொழிலதிபர் மகள் திருமணத்தை நிறுத்தி விட்டதாக பகிரங்கமாக பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.