அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் ஏற்படும் பின்விளைவுகள் என்னன்னு தெரியுமா…இதை படிங்க

இதயத்தைப்போலவே ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் உறுப்பு, சிறுநீரகம். இது இயங்குவதை நிறுத்திவிட்டால் அவ்வளவுதான்.

உடலில் உள்ள கெட்ட நீரை மட்டுமல்ல, தேவைக்கு அதிகமான உப்பு, பல்வேறு நச்சுக்கள், அவசியமற்ற மருந்துக்கூறுகள் போன்றவற்றை வெளியேற்றுவதும் சிறுநீரகங்கள்தான். சிறுநீரகத்தை அதிகம் தாக்கும் பிரச்னைகளில் முக்கியமானது, சிறுநீரை அவசியமானபோதும் வெளியேற்றாமல் இருப்பதுதான்.

சிறுநீரை அதிகமாக அடக்கும் போது, பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும். நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசௌகரியத்தை உணரக்கூடும். மேலும் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.

சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்தால், கவனச்சிதறல் ஏற்படும். கவனச்சிதறல் மிகவும் ஆபத்தானது. இதனால் பைக்கில் பயணம் மேற்கொள்ளும் போது வந்து, அதனை நீண்ட நேரமாக அடக்கிக் கொண்டே பைக் ஓட்டினால் சரியாக வண்டி ஓட்ட முடியாமல் போய், பின் அது விபத்துக்களுக்கு வழிவகுக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட முக்கிய காரணம் சிறுநீரகத்தை அடக்குவது தான். சிறுநீரகத்தை அடக்குவது தான் முதல் காரணம்.

ஒரு சிலர் தனது வீட்டில்உள்ள பாத்ரூமை மட்டும் பயன்படுத்த விரும்புவார்கள். எனவே பொது இடங்களுக்கு செல்லும் போது சிறுநீரகத்தை வெளியேற்றாமல் அதனை தேக்கி வைத்து விடுகின்றனர். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சிறுநீரகப் பிரச்சனையை உருவாக்குகின்றது.

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் தீமைகள்
சிறுநீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் திறனை சிறுநீர் பையின் தசைகள் விரைவில் இழந்துவிடுகின்றன. இதனால் பின்னாளில் அவசரத்திற்கு கூட 2 நிமிடம் அடக்க முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து சிறுநீர் வெளியேறும் நிலை ஏற்பட்டுவிடும்.

எளிதில் சிறுநீரகத் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சிறுநீரில் உள்ள யூரியா தாது வெளியேற காலம் தாழ்த்தினால், சிறுநீரகத்தில் மணல் போல் அவை படிந்துவிடும். இவை காலபோக்கில் யூரிக் கற்களாக மாறிவிடுகின்றன. பின் சிறுநீர் செல்லும் வழித்தடத்தை அது அடைத்துக்கொள்கிறது. வலியும் வேதனையும்தான் மிச்சம்.

சிறுநீர்ப் பை நிறைந்திருந்தால் ரத்தம், உட்கொள்ளும் நீர் ஆகியவற்றைச் சுத்திகரிக்கும் பணிகள் முடங்கிவிடும். அந்தச் சுத்திகரிப்பு செயல் முறையே திணறிவிடும்.

முக்கியமாக அடிவயிறு வலி, கவனச்சிதறல் மேலும் ஒற்றைத் தலைவலி வரை ஏற்படும்.

மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்புகள் உண்டாகாமல் இருக்க, இயற்கை உபாதைகளைக் குறைப்போம். இதில் வெட்கப்பட எதுவுமே இல்லை. அப்படி வெளி இடங்களில் கழிப்பிட வசதி இல்லை எனும் பட்சத்தில், நீர் அல்லது நீர்ம ஆகாரங்களை எடுத்துக்கொள்வதை குறைத்துக்கொள்ளலாம்.