பல் சொத்தை பிரச்சனையை கண்டிப்பாக ஒவ்வொருவரும் சந்தித்திருப்போம்.

பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான்.

சொத்தைப் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் அதிகமாக பெருகி, பற்களைத் தாங்கும் எலும்புகளில் தொற்றுகளை ஏற்படுத்துகின்றன.

இதனை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், உயிருக்கே உலை வைத்துவிடும்.

அந்தவகையில் பல் சொத்தை எப்படி ஆரம்பத்திலே தடுக்கலாம் என பார்ப்போம்.

பல் துலக்கியை பொறுத்தவரையில், மிருதுவான அல்லது நடுத்தர வகை பல்துலக்கியைப் பயன்படுத்துவது பற்களின் பாதுகாப்புக்கு நல்லது.
குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்தவுடன், ஈறுப் பகுதியை தண்ணீரால் நன்றாக துடைத்துவிட வேண்டும். தினமும் ஒரு கரட், ஒரு வெள்ளரிக்காயைச் சாப்பிட்டு வந்தால், பல் சுத்தமடையும்.
வைட்டமின் – சி, வைட்டமின் – டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலை காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.
பற்களில் ஒட்டிக்கொள்ளக்கூடிய இனிப்பு மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
காபி, தேநீர் உள்ளிட்ட அதிக சூடான உணவு வகைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிக குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது.
வெற்றிலை பாக்கு போடுவது, புகை பிடிப்பது, பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றை தவிர்த்தால், பல்லுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்வது பற்களுக்கு நல்லது. காரணம், அவற்றில் உள்ள அமிலங்கள் எனாமலை தாக்கி பற்களையும் சிதைக்கின்றன.
குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், சிறு வயதிலேயே அதை தடுத்து விட வேண்டும். தவறினால், சொத்தை பற்கள் மட்டுமல்ல தெற்றுப் பற்களும் தோன்றக்கூடும்.
பால் அருந்துவதன் மூலம் அதிலுள்ள கால்சியம் பல்லுக்கு பாதுகாப்பு தரும்.
6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் பழக்கத்தை பின்பற்றினால், பற்சொத்தை உள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம்.
செய்யக்கூடாதாவை
கரி, உப்பு, மண், செங்கல்பொடி, சாம்பல், நெல் உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது.
குண்டூசி, குச்சி போன்றவற்றால் பல் ஈறுகளைக் குத்தி அழுக்கு எடுக்கக்கூடாது.
நகம் கடிக்கக் கூடாது. காரணம், அதன் மூலம் கிருமிகள் வாய்க்குள் சென்று நோய்களை உண்டு பண்ணும்.