முதல் முறையாக சசிகலா விடுதலை குறித்து முதல் முறையாக முதல்வர் பழனிச்சாமி கூறிய பதில் என்ன தெரியுமா ?

சசிகலா விடுதலையாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அது குறித்த கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலையாவர் என்பதே அவரது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு சிறை சென்ற சசிகலா 2021ஆம் ஆண்டு விடுதலையாவார் என சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தண்டனை காலத்துடன் விதிக்கப்பட்ட 10 கோடி அபராதத் தொகையையும் கட்டி விட்டார் சசிகலாவின் வழக்கறிஞர். இதனால் சசிகலாவின் விடுதலை உறுதியாகி விட்டது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்ட சசிகலா, அதன் பின் முதல்வர் ஆகவும் முயற்சி செய்தார்.

ஆனால், சொத்துகுவிப்பு வழக்கில் நீதிமன்றம் தண்டனை அறிவிக்க, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவுக்கு, 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்த தவறினால், மேலும், சிறை தண்டனை ஒரு ஆண்டு வரை கூடலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், சசிகலா சார்பில் அவருக்கான அபராதத் தொகையான 10 கோடியே 10 லட்சம் ரூபாய் நேற்று செலுத்தப்பட்டது.

இதன் மூலம் சசிகலா வரும் ஜனவரி மாதம் விடுதலையாவது உறுதியாகிவிட்டது. இதனால் இது தமிழக அரசியலில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

சசிகலா அபராதத் தொகை கட்டிய பின்பும், அவர் விடுதலை கிட்டத்தட்ட உறுதியான பின்பும் இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக பதில் அளித்துள்ளார்.

இது குறித்து இன்று பத்திரிக்கையாளர்கள் அவரிடம், சசிகலா வருகையால் ஏதேனும் மாற்றம் வருமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கட்சியிலோ, ஆட்சியிலோ எந்த மாற்றத்தையும் சசிகலாவின் விடுதலை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார்.